முகமூடிகள்

உடல் நலத்திற்கும் மோசமான காற்று தரத்திற்கும் முகமூடி ஒரு பொதுவான அடையாள சின்னமாய் உள்ளது.

காற்று மாசுபாட்டினால் விளையக்கூடும் தனிப்பட்ட அபாயங்களை சுட்டிக்காட்ட ‘என்னுடைய நகரத்தின் முகமூடியை கழற்று’ என்ற இயக்கமானது காற்று மாசு அளவிற்கு ஏற்ப தன் வண்ணத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு சிறப்பு எல்.ஈ.டி. ஒளி முகமூடியை உருவாக்கியுள்ளது. ‘ஏர்பீம்’காற்று தர கண்காணிப்பு சாதனம் மற்றும் ‘ஏர்காஸ்டிங்’மென்பொருளைப் பயன்படுத்தி நாம்PM2.5 வகை நுண்துகள் காற்று மாசுபாட்டின் அளவை காண முடியும். இதன்மூலம் ஒளி முகமூடிக்குள் தகவல்கள் வந்தடைய காற்றின் தூய்மை உடனுக்குடன் எப்படி மாறுகிறது என்றும் தெரியவரும்.

PM 2.5 என்றால் என்ன?

 

PM 2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டர் விட்டத்திற்கு குறைவான நுண்துகள்கள்.மின்சார உற்பத்தி,வீட்டை வெப்பமாக்குதல் மற்றும் வாகன இயந்திரங்களில் பயன்படுத்தல் போன்ற செயல்களில் திட மற்றும் திரவ புதைபடிவ எரிபொருள்களை எரிக்கும் போது புகைக்கரி உட்பட துகள்மப்பொருள் உமிழ்வுகள் வெளியேறுகின்றன. PM2.5அதிகரிப்பதற்கு தொழில்துறை செயல்பாடுகளும் தூசியும் காரணங்களாய் உள்ளன. தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபடுத்திகளில் PM2.5மட்டுமல்ல. PM2.5வெளியிடப்ப்படும் பல்வேறு செயல்பாடுகளில் பெரும்பாலானவை பல காற்று மற்றும் காலநிலை மாசுபடுத்திகளை வெளியிடுகின்றன. இத்தகைய நுண்துகள் காற்று மாசுபாடு சுவாச நோய்கள் மற்றும் ஆஸ்துமா,நாள்பட்ட அடைப்பு நுரையீரல் நோய்,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதயம் சார்ந்த நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.1

ஒளி முகமூடிகளின் நிறங்கள் எதனை குறிக்கின்றன?

(0-12 µg/m3)

பச்சை: அபாயகரமானதாக இல்லாத நல்ல தரமான காற்று.

(12.1-35.4 µg/m)

மஞ்சள்: காற்று மாசுக்கு அளவிற்கதிகமான உணர்திறன் உள்ளவர்களுக்கு சற்று ஆபத்தானது

(35.5-55.4 µg/m3)

ஆரஞ்சு: காற்று மாசுக்கு உணர்திறன் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமற்றது.

(55.5-150 µg/m3)

சிவப்பு: அனைவருக்கும் ஆரோக்கியமற்றது, மேலும் காற்று மாசு உணர்திறன் உள்ளவர்களுக்கு ஆபத்தான உடல்நல விளைவுகளை உண்டாக்கக்கூடிய அளவிற்கு ஆபத்தானது.

பச்சை நிறத்தை தவிர்த்து மற்ற நிறங்களுக்கு காற்று தர குறியீடு பரிந்துரைப்பதாவது சுறுசுறுப்பான குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட பலவீனமான மக்கள் வெளிப்புற செயல்களில் நீண்ட நேரம் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதை குறைக்கவேண்டும் என்பதுதான்.

குறிப்பிடப்பட்ட அளவுகோல் AQICN அடிப்படையிலானது.

காற்று மாசுபாடு எனும் பிரச்சனைக்கு முகமூடி அணிந்துகொள்வது, ஆபத்தான இடங்களை தவிர்ப்பது, வீட்டுக்குள்ளேயே இருப்பது போன்ற தீர்வுகள் நடைமுறைக்கு அப்பாற்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இவை நிரந்தர தீர்வுகளாகவும் இல்லாமல் உள்ளன.

Principal photography © Global Call for Climate Action / Greg McNevin and ©Daniel Schoenen Fotografie