சென்னை

 

 

சுத்தமான சுகாதாரமான காற்று,ஆரோக்கியமான காலநிலை

இந்தியாவில் உள்ள சென்னை மாநகரில்,காற்று மாசு மற்றும் அதை தடுப்பதற்காக முகமூடிகள் மிக பரவலாக உபயோகிக்கப்படுகின்றன.ஒரு சீரழிந்த சுற்றுச்சூழலில் வாழ்வதற்கும்,இதனால் வரும் சுகாதார தாக்கங்களையும் உடல்நல சீர்கேடுகளையும் அனுபவிப்பதற்கும் மக்கள் தங்களை பழக்கிக்கொண்டுள்ளனர்.இவைகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளிடமும் நிறுவனங்களிடமும் நம்பிக்கயின்மயே நிலவுகிறது. நல்ல உடல்நலத்திற்கு ஆரோக்கியமான சுகாதாரமான எதிர்காலம் மலரக்கூடும் என்ற நம்பிக்கை ஒரு சராசரி மனிதனுக்கு வருவது கடினமான ஒன்றாக உள்ளது.

வட சென்னையில் உள்ள எண்ணூர் மற்றும் மணலி என்ற இரு குறைந்த வருமானம் உள்ள பகுதிகள்,நகரின் இரு பிரதான தொழில்துறை மண்டலங்களை கொண்டுள்ளன.எண்ணூரில் உள்ள மூன்று அனல் மின் நிலையங்களும் மணலியிலுள்ள பல பெட்ரோகெமிகல் தொழிற்சாலைகளும், தங்களின் சாம்பல் குளங்களினாலும் ரசாயன உமிழ்வுகளினாலும் சென்னையின் சீரழிந்துவரும் காற்று தரத்திற்கு முக்கிய காரணங்களாய் உள்ளன.காமராஜர் போர்ட் லிமிடெட் மற்றும் சென்னை போர்ட் டிரஸ்ட் ஆகியவை நகரத்தின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ளதுடன்,நகரின் நிலக்கரி மற்றும் சரக்குக் கப்பல் மையங்களாய் உள்ளன.மேலும்,துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிரிந்து மேலும் கீழும் செல்லும் கனரக வாகன இயக்கம் இந்த பகுதியின் அதிகமான மாசு அளவுக்கு கணிசமாக பங்களிகின்றன.சென்னையின் தொழிற்துறை மண்டலங்கள் புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கின்றன.இந்த புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான தொழிற்சாலைகள்,ஆரோக்கியமற்ற காற்றை உருவாக்கி உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணமாய் உள்ளன.

காற்றை மாசுபடுத்தும் அனைத்து தொழிற்சாலைகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்களின் ஒப்புதலை பெறாமலும்,அவர்கள் தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய போது அது கருதப்படாமலும் இருக்கின்றன.இது அந்த பகுதிக்கு பெரிய பின்னடைவாக இருக்கிற போதிலும்,அரசின் மீதும் ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையங்களின் மீதும் உள்ள நம்பிக்கையின்மையும்,இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இல்லாததும்தான் பெரிய சவாலாக உள்ளது.இதனை சார்ந்து முடிவெடுக்கக்கூடிய நபர்களும் பொது நிறுவனங்களும் இந்த சமூகங்களை பாதுகாக்கும் பொறுப்பை எடுப்பது மட்டுமல்லாமல்,காற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் நம் நகரத்தின் முகமூடியை அகற்றும்பொறுப்பை எடுக்கவேண்டும்.

பாகுபாட்டை நிறுத்துங்கள்;எண்ணூர் மணலி காட்டுப்பள்ளி மண்டலத்தை கடுமையாக மாசுபட்ட பகுதியாய் அறிவியுங்கள்

எண்ணூர் பகுதியை கடுமையாக மாசுபட்ட பகுதியாய் அறிவிக்கும்படி சுற்றுச்சூழல்,வனத்துறை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான அமைச்சரை கேட்டுக்குக்கொள்ளுங்கள்.அதோடு,தொழில்துறையின் விரிவாக்கத்திற்கு தடையை விதிக்கவும்,தற்போதுள்ள தொழிற்சாலைகளின் உமிழ்வுகளை கட்டுப்படுத்த சர்வதேச தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும்,உள்ளூர் சமூகத்துடன் கூடி அப்பகுதியிலுள்ள காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் கோரிக்கை விடுங்கள்.

Chennai in Tamil

  

ஐயா

எண்ணூர்-மணலி- காட்டுப்பள்ளி தொழில்துறை மண்டலமானது மாநில மற்றும் மத்திய அமைப்புக்கள் பங்குபெறும் உள்பரவிய பாரபட்சத்திற்கான தளமாய் உருவெடுத்துள்ளது. இந்த அமைப்புகள், தங்களின் செயல்களாலும் செயலின்மையாலும் இவ்விடங்களிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை, அரசியல் மற்றும் பொருளாதார பலம் இல்லாத காரணத்திற்காகவே அதிகரிக்கும் காற்று மாசு எனும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றன.

எண்ணூர்-காட்டுப்பள்ளி-மணலி தொழில்துறை மண்டலங்களை சூழ்ந்திருக்கும் வட சென்னை மற்றும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிகளாவண தமிழ்நாட்டில் அதிகமான மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கொண்டுள்ள பகுதிகளாய் உள்ளன. சென்னை பெருநகர பகுதியில் இதே இரண்டு தொகுதிகளில்தான் SC/ST, பழங்குடியினர் மற்றும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குறைந்த அரசியல் அதிகாரம்தான், வசதிகளும் அரசியல் அதிகாரமும் வாய்ந்த மற்ற பகுதிகளில் போன்று இல்லாமல் இப்பகுதியை மட்டும் நாளுக்கு நாள்

அடர்ந்த மக்கள் தொகை கொண்ட இந்த தொழில்துறை பகுதி கொண்டிருப்பது: சென்னை மாநகரின் மிகப்பெரிய குப்பைமேடான கொடுங்கையூர்; ஒரு பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு ஆலயம்; அசோக் லெய்லண்டின் கனரக வாகனங்களுக்கான வார்ப்பகம் உள்ளிட்ட பல வார்ப்பகங்கள்; நூற்றுக்கணக்கான இரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள்; 3330 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு நிலக்கரி எரிப்பு வெப்ப ஆலைகள்; நிலக்கரி சேமிப்பு கிடங்குகள்; 1000 ஏக்கர் பரப்பளவில் இரண்டு நிலக்கரி சாம்பல் குளங்கள்; இரண்டு பெரிய வர்த்தக துறைமுகங்கள்; இவைகளை சார்ந்த கனரக வாகன போக்குவரத்து; பல ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் சேமிப்பு தொட்டிகள்; உப்பு நீக்கம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.

இவைகளெல்லாம் போதாது என்பது போல், இன்னும் பல திட்டமிடப்பட்டுள்ளன: 6600 மெகாவாட் கூடுதலான நிலக்கரி மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன், அதனை சார்ந்த சாம்பல் மற்றும் நிலக்கரி சேமிப்பு உள்கட்டுமானம், 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு கொண்ட ஈரநிலங்களை மாற்றியமைத்து ரசாயன மற்றும் மருந்து நிறுவனங்கள் இப்பகுதியில் உருவாக்கப்படவிருக்கின்றன.

CPCB இந்தியாவின் முதல் 10 மாசுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மனலி தொழிற்துறை பகுதியைத் தரப்படுத்தியது. எண்ணூர் மண்டலம் இப்பட்டியலில் கருதப்படவில்லை. இல்லையெனில் இதுவும் தேசிய அளவில் மிக மோசமான மாசுபடுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தகுதி பெற்றிருக்கும். இங்கு தற்போதுள்ள தொழிற்சாலைகள் மற்றும் அவைகளின் மாசு ஏற்கனவே இப்பகுதியை ஒரு உலகளாவிய மாசு முக்கியத்தலமாக மாற்றி, இங்குள்ள உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு அபாயகரமாக்கியுள்ளன. குடிமக்களின் குழுவால் சேகரிக்கப்பட்ட காற்று தரவரிசைப்படி, இப்பகுதியின் PM2.5 அளவு, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களைவிட குறைந்தபட்சம் 1.7 இல் இருந்து 2.3 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இம்மாதிரிகள் அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருந்தால், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆரோக்கியமற்ற காற்று தரத்திற்கான ஒரு ஆலோசனையை வழங்கியிருக்கும்; அந்த அளவுக்கு இப்பகுதியில் PM2.5-இன் அளவு உள்ளது.

எண்ணூரில் உள்ள காற்று ஆர்சனிக், லெட், மாங்கனீசு மற்றும் நிக்கல் போன்ற நரம்பு நஞ்சுக்களை கொண்டுள்ளது. இது கலிபோர்னியா சுற்றுச்சூழல் உடல்நலம் அபாய மதிப்பீடு மையத்தின் (OEHHA) தரநிலைகளை விட அதிகமாக இருக்கின்றன. இப்பகுதி கடுமையாக மாசுபட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த பாதிப்பில் சாதி மற்றும் வர்க்க பரிமாணமும் உள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாய் உள்ளது.

நாம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை கோருகிறோம்:
1) மணலி-எண்ணூர்-காட்டுப்பள்ளி பகுதியை மிகவும் மாசுபட்ட பகுதியாக அறிவிக்கவும்
2) 2) மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கோ விரிவாக்கவோ தடையை அமல்படுத்த வேண்டும்
3) 3) இப்பகுதியின் சுற்றுச்சூழல் போக்கை மாற்றியமைக்கவும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மீட்கவும் அவசர நடவடிக்கைகள்

எடுங்கள்.
தங்கள் உண்மையுள்ள

**your signature**

SEND

Share this page:

   

“சமர்ப்பி” கிளிக் செய்வதன் மூலம் உனக்கு சம்மதமா முகமூடியை விலக்கி உண்மையை அறிய என் பெருநகரம் (UMC) மற்றும் UMC பங்காளிகள் உங்களுடன் தொடர்பில் இருப்போம் இந்த படிவத்தில் உங்களுக்கு வழங்க தகவலைப் பயன்படுத்துவோம் மற்றும் UMC முன்முயற்சி தொடர்பாக மின்னஞ்சல் வழியாக அளித்தது. நீங்கள், அவர்களிடம் இருந்து பெறும் எதாவது மின்னஞ்சலின் அடிக்குறிப்பில் உள்ள “குழுவிலகு” இணைப்பு கிளிக் செய்வதன் மூலம் அல்லது [email protected] எங்களை தொடர்பு விலகிக் கொள்ளலாம். நாம் மின்னஞ்சலை செயலாக்க MailChimp பயன்படுத்த.

இதனைப்பற்றிய தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து உங்களுடன் செயலில் இறங்க ஊக்குவியுங்கள்:

 

PARTNERS

Ennore Anaithu Meenava Grama Kootamaipu

x

Principal photography © Global Call for Climate Action / Greg McNevin and ©Daniel Schoenen Fotografie